தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை பானுபிரியா.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை தமிழ் சினிமா துறைக்கு அளித்துள்ளார்.இவர் தமிழில் தனது முதல் படமான மெல்ல பேசுங்கள் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.நடிகை பானுபிரியா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.
பானு பிரியா அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் கால் தடம் பதித்துள்ளார்.நடிகை பானு பிரியா அவர்கள் தமிழ் சீரியல் தொடர்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் நடித்துள்ளார்.
பானுப்பிரியாவிற்கு சாந்திப்பிரியா என்ற தங்கை இருக்கிறார். அவரும் ஒரு நடிகை தான். 1987 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் சூப்பர் ஹிட் இயக்கத்தில் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நிஷாந்தி எனும் சாந்திப்பிரியா.
இவர் முதல் படத்திலேயே தமிழக மக்களின் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.முன்னணி இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பிரபல நடிகை பானுப்ரியாவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் ஹிந்தி டிவி தொடர்களில் நடிக்க சென்றுவிட்டார். பிறகு பல ஆண்டுகளாக சினிமாவில் துறையில் இருந்து பல இவர் தற்போது மீண்டும் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சாந்திப்பிரியா அவர்கள் ஜீ ஸ்டூடியோ நிறுவனம் Mx player க்காக முன்னணி நாயகர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் இணைய என்று செய்திகள் வெளியாகி இருந்தது.மேலும், இந்த வெப்சீரிஸ் இந்தி மற்றும் தமிழில் தயாராக இருக்கிறது என்றும் இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது