rainfall

இந்த மழைக்காலங்களில் நம்மை அ டுத்தடுத்து தா க்க இருக்கும் நோ ய்கள் !! த ப்பிக்க என்ன செய்ய வழி தெரியுமா ??

ஆரோக்கியம்

இந்த மழைக்காலங்களில் நம்மை அ டுத்தடுத்து தா க்க இருக்கும் நோ ய்கள் !! த ப்பிக்க என்ன செய்ய வழி தெரியுமா ??மழைக்காலம் என்று ஆரம்பித்து விட்டாலே நோய்களும் நம்மை தாக்குவதற்கு வரிசை கட்டி வரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மழைக்காலங்களில் நாம் மிகவும் பாதுகாப்பாகவே இருக்க வேண்டும். சாதாரண காய்ச்சல், தலைவலி, சளி, ஜலதோசத்தில் ஆரம்பித்து இன்று மனிதர்களின் உ யிரைப் பறிக்கும் கொரோனா வரை கொண்டு சென்று விடலாம்.

மிகவும் குளிர்ச்சியான இந்த தருணங்களில் நோய்கள் அதிகமாக பரவுவதற்கு காரணம், ஆங்காங்கே தேங்கும் நீரிலிலிருந்து கொசு மற்றும் ஈக்கள் முக்கியமான காரணமாக இருக்கின்றது.

இவ்வாறு வரும் நோ ய்களிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து தப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பரவும் நோ ய்கள்

பருவ நிலை மாற்றம் காரணமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதன் காரணமாக சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டுவதுடன், இன்ஃப்ளூயன்சா வைரஸ் காரணமாகவும் சளி, இருமல், வயிற்று போக்கு பி ரச்சினை ஏற்படுகின்றது.

இவற்றினைத் தொடர்ந்து நெஞ்சுச் சளி, நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் பாதிப்பு, நெற்றி மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகளில் தொற்று காரணமாக சைனஸ் தலைவலி ஏற்படலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காய்ச்சல், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத்தொற்றால் நிமோனியா காய்ச்சல், அனோபீலஸ் என்ற கொசு மூலம் மலேரியா,‘ஏடிஸ் எஜிப்டி’ என்ற கொசு மூலம் டெங்கு காய்ச்சல் யெல்லோ ஃபீவர், சிக்கன்குனியா நோயும் பரவுகின்றது.

கண்ணுக்குள் இருக்கும் கஞ்சக்டைவா எனும் பகுதியை அடினோ வைரஸ் தாக்குவதால் மெட்ராஸ் ஐ நோய் ஏற்படுகின்றது.

மழைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

தினமும் வெதுவெதுப்பான நீரில் நன்கு தேய்த்து குளிக்கவும். சைனஸ், ஆஸ்துமா முதலான தொந்தரவுகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை படி குளிக்கலாம்.

ஆடையை நன்றாகத் துவைத்துப் பயன்படுத்துவது அவசியம். குறிப்பாக உள்ளாடையினை நிச்சயம் துவைத்து உபயோகிக் வேண்டும்.

ஃப்ளு காய்ச்சல், நிமோனியா காய்ச்சலை தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

காரம், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். வைட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கொள்ளவும்.

பழைய உணவுகளை சாப்பிடாமல் புதிதாக சமைத்த உணவினை மூன்று வேளையிலும் சாப்பிட வேண்டும்.

நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்பு, கொழுப்புச் சத்து என அனைத்தும் நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.

மூலிகை சூப், ரசம், கிரீன் டீ முதலியவற்றை அருந்தலாம்.

மழைக்கால நோய்களை தடுக்க வழிகள்

மழைக்காலத்தில் அதிகமாக காபி, டீ குடிப்பதை தவிர்க்கவும்.

மழைக்காலத்தில் தண்ணீர் தாகம் இல்லை என்றாலும் சரியான அளவு திர உணவுகள், தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரை அடக்கக்கூடாது. கொதிக்க வைத்த நீரை தான் குடிக்க வேண்டும்.

வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். தேங்காய் ஓடுகள், டயர்கள் வீட்டை சுற்றி இல்லாதவாறும், செருப்பு, ஷு இவற்றினை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

இரு தினங்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அனுகவும். தும்மும் போதும், இருமும் போதும் கர்சீப் பயன்படுத்தவும்.

அடிக்கடி ஆவி பிடித்தல், மிதமான சூட்டில் உள்ள வெந்நீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படுமாறு வாய்கொப்பளிப்பது செய்தால், நுரையீரல், தொண்டை பு ண் பி ரச்சினை வராமல் தடுக்கலாம்.

15 நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறை, பெட்ஷீட் இவற்றினை துவைத்துவிட வெண்டும்.

செயற்கை ரசாயனங்கள் கலந்த கொசுவர்த்தி, கொசுவர்த்தி திரவம் இவற்றினை பயன்படுத்தாமல், கொசு வருவதற்கு முன்பு வீட்டின் கதவு ஜன்னல் ஆகியவற்றை அடைத்துவிடவும்.

Leave a Reply

Your email address will not be published.