உங்களின் இளம் வயதிலேயே முக சுருக்கமா? சுருக்கத்தை போக்குவதற்கான இயற்கை வழிமுறைகள் இதோ..!!

ஆரோக்கியம்

உங்களின் இளம் வயதிலேயே முக சுருக்கமா? சுருக்கத்தை போக்குவதற்கான இயற்கை வழிமுறைகள் இதோ..!!பெண்களின் நெற்றியில் சுருக்கம் இருந்தால் அது பளிச்சென தெரியும். நெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம்.

பெண்களின் நெற்றியில் சுருக்கம் இருந்தால் அது பளிச்சென தெரியும். முக அழகையும் அது கெடுக்கும். வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்தபடி தலையணையில் முகம் பதித்து தூங்குபவர்களுக்கு மற்றவர்களை விட நெற்றியில் சுருக்கங்கள் அதிகம் தோன்றும்.முகம் தலையணையில் அழுத்தமாக பதியும்போதும் சுருக்கங்கள் ஏற்படக்கூடும்.

இது தவிர ம.ன அ.ழு.த்.த.ம், க.வ.லை, நீர்ச்சத்து குறைபாடு, சூரியன் அல்லது புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பா.தி.ப்.பு, ஹார்மோன் மாற்றங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் போன்றவையும் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன.

நெற்றிச் சுருக்கத்தை போக்குவதற்கான வழிமுறைகள்

ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் பாதாம் விழுது, ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறு, அரை டீஸ்பூன் கோதுமை எண்ணெய் போன்றவைகளை சேர்க்கவும். அதனை நன்றாக கலந்து நெற்றியில் பூசி, அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம்.

ஒரு வாழைப் பழத்தை நன்றாக பிசைந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி சேர்க்கவும். பின்பு இரண்டு டீஸ்பூன் பால், 5 துளிகள் தேன் கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். அதனை நெற்றியில் தடவிவிட்டு கால் மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.

எண்ணெய் மசாஜ் செய்வதும் நெற்றியில் உள்ள சுருக்கங்களை போக்க உதவும். ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய், அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 4 சொட்டு கோதுமை எண்ணெய் ஆகியவற்றை கலந்து நெற்றியில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் நன்றாக உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்துவிட்டு தூங்க செல்லலாம்.

உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதும் சுருக்கத்தை தடுக்க உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.