என்னது காலையில் சீக்கிரம் எழுவது ஆ.பத்தா? என்ன இது புதுசால இருக்கு : கட்டாயம் இதைப் படிங்க புரியும் உங்களுக்கு..!!

ஆரோக்கியம்

நாம் தினசரி ஆக்டிவாக செயல்பட உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல தான் தூக்கமும் மிகவும் முக்கியமானது. சரியான தூ.க்கம் ஒருவருக்கு வாழ்வில் பலவற்றை பெற்றுத் தரும். அதோடு அதிகாலையில் எழுந்திருப்பது பற்றி பல கட்டுக்கதைகள் நம்மிடையே உலவுகின்றது.ஆனால் நம் சிறுவயதிலிருந்தே அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும் அப்படி படித்தால் வாழ்வில் பல வெற்றிகளை நாம் காணலாம் என்று வீட்டார் சொல்லி கேட்டிருப்போம். அந்த வகையில் அதிகாலை விழிப்பு நம் வாழ்வில் வெற்றியை தருமா? அதிகாலையில் எழுவதை பற்றிய கட்டுக்கதைகளை இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம்.

சீக்கிரம் எழுந்திருப்பது சிக்கலில் தள்ளுமா?

அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலருக்கு நல்ல ம.னநி.லையை பெற்று தரும் இருந்தாலும் கூட சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்ற வெறி உங்களை நிம்மதியாக தூ.ங்க விடாது அல்லது உடல் சோர்வு பதட்டம் போன்றவை நீங்கள் சீக்கிரம் எழுவதால் ஏற்படும்.

தூ.க்கத்.திலிருந்து சீக்கிரம் எழுவதை பற்றி நிபுணர்கள் கூறும் பொதுவான விஷயம் என்னவென்றால் சரியான தூக்கம் இல்லாமல் இருந்தால் உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய், உயர் ர.த்.த அ.ழுத்.தம், வி.ரக்.தி போன்ற பல ஆ.பத்.து மற்றும் பல சுகாதார பிரச்சினைகள் ஏற்படும்.எனவே, சீக்கிரம் எழுந்திருப்பது மட்டுமே வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நேர்மறையையும் தருகிறது என்று நினைப்பது முற்றிலும் உண்மை அல்ல. போதுமான தூக்கம் இருந்தாலே போதும்.

அதிகாலை எழுவதால் கூடுதல் நேரம் கிடைக்குமா?

சிலரிடம், நீங்கள் ஏன் அதிகாலை எழுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு நான் படுக்கையிலிருந்து சீக்கிரம் எழுவதால் எனக்கு கூடுதல் நேரம் கிடைக்கிறது அதனால் நான் என் பணிகளை விரைவாக செய்கிறேன் என்று கூறுவார். ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை.

ஒருவர் தூக்கத்திலிருந்து சீக்கிரம் எழுவதால் 24 மணி நேரம் என்பது 26 மணி நேரம் ஆகி விடாது. விரைவாக எழுந்து பணிகளை செய்வதால் அவர் செய்யும் பணிகள் அனைத்தும் சரியாக இருக்கும் என்று நம்மால் கூற முடியாது.

படுக்கையிலிருந்து சீக்கிரம் எழுவதை பெருமையாக கூறிக் கொள்ளும் நபர்கள் அவர்களது வேலையை எவ்வளவு சரியாக செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தான் தெரியும்.

சீக்கிரம் எழுவதால் சீக்கிரம் தூக்கம் வராதா?

அதிகாலை சீக்கிரம் எழுவதால் நீண்ட நேரம் தூங்க வேண்டியதில்லை என்பது சுத்தமான பொய். உடலுக்கு தேவையான தூக்கம் முக்கியம் என்பதை பற்றி முன்னரே நாம் கண்டோம்.சீக்கிரம் எழுந்தால் தூக்கம் வராது என்பதெல்லாம் உண்மையில்லை. நீங்கள் இரவில் தூங்கும் நேரத்திலிருந்து சரியாக 8 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.

அதிகாலை விழிப்பு ஒரு ம.ரப.ணு

ஒருசிலர் அதிகாலையில் எழுவது தலைமுறை தலைமுறையாக வரும் இயல்பு என்று கூறுவர். இதுதான் இருப்பதிலே கடைந்தெடுத்த பொய். அதிகாலை விழிப்பு என்பது ஒரு பழக்கம். அதை நீங்கள் இப்போது கூட தொடங்கலாம்.நீங்கள் வளரும்போது உங்களின் பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்க்கை முறையை ஒர் அளவிற்கு பாதிக்கலாம், ஆனால் சீக்கிரம் எழுந்திருப்பது ம.ரப.ணு தொடர்பானது அல்ல. இது ஒரு பழக்கம் போன்றது.

சனி, ஞாயிறு தூ.ங்குவ.து ஆரோக்கியமானதா?

பெரும்பாலான அலுவலகப் பணியாளர்கள் வார இறுதி நாட்களில் நன்றாக தூ.ங்க.லாம் என்று நினைப்பதுண்டு. திங்கள் முதல் வெள்ளி வரை தூக்கமில்லாமல் ஓடி ஓடி வேலைசெய்யும் நபர்கள் சனி-ஞாயிற்றுக் கிழமைகளுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்.சனி-ஞாயிறு வந்துவிட்டால் அன்று நாள் முழுதும் நல்ல தூக்கம் தூங்குவார்கள். இது நிச்சயம் உதவாது. இந்த பழக்கம் உண்மையில் ஆரோக்கியமானதல்ல.

தூக்கம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது சரியான தூக்கம் இல்லை என்றால் நிச்சயம் நம்மால் சரியாக செயல்பட முடியாது.
ஆகவே அதிகாலையில் சீக்கிரம் எழுகிறீர்களோ அல்லது சரியான நேரத்தில் எழுகிறீர்களோ உங்கள் உடலை சரியாக இயக்குவதற்கு தூக்கம் மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அதற்கு தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.