உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை உள்ளதா?? இதை இப்படி செய்து பாருங்கள்., ஆரோக்கியமாக வாழுங்கள்.!

ஆரோக்கியம்

மலச்சிக்கல் (Constipation; costiveness) என்பது மலத்தை வெளியேற்றுவதற்கு கடினமாக உள்ள நிலையைக் குறிக்கும். மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை மட்டும் தான். நாம் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு நாம் முத்திரை பயிற்சி செய்து குணமடையலாம். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.வலது கையின் ஆள்காட்டி விரல், மற்றும் நடு விரலின் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ள வேண்டும்.

மற்ற இரு விரல்களும் நேராக வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையின் நடு விரல், மற்றும் மோதிர விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும்.

மற்ற ஆள்காட்டி விரலும் சிறுவிரலும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும்.

உணவு சாப்பிட்டபின் இந்த முத்திரை பயிற்சி செய்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலனை கொடுக்கும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published.