முகப்பருவுக்கு இனி இதுவே நிரந்தரமான தீர்வு..தடமும் காணாமல் போகும்.. தூக்கிவீசும் வாழைப்பழத் தோலுக்கு இவ்வளவு சக்தியா?

ஆரோக்கியம்

முகப்பருவுக்கு இனி இதுவே நிரந்தரமான தீர்வு..தடமும் காணாமல் போகும்.. தூக்கிவீசும் வாழைப்பழத் தோலுக்கு இவ்வளவு சக்தியா?பொதுவாக தினசரி வாழைப்பழம் சாப்பிடுவது நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். அதிலும், மலச்சிக்கல் போக வாழைப்பழம் அருமருந்து. பெரும்பாலானவர்களின் உணவுக் கலாச்சாரத்தில் வாழைப்பழத்துக்கு முக்கிய இடம் உண்டு.

நாம் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த தோலை பயன்படுத்தி முகப்பரு பிரச்னையை போக்கலாம். வாழைப் பழத்தோல் சருமப் பிரச்னையையும் தீர்க்கிறது. இதை எப்படி பயன்படுத்துவது என இனி பார்ப்போம்.

முதலில் சுத்தமான பாலை எடுத்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அது ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பின்னர் வாழைப் பழத்தோலின் உள்பகுதியை எடுத்து முகத்தில் தேய்த்து, 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படிச் செய்வதால் சருமம் பொலிவு பெறும்.

இதேபோல் வாழைப்பழத்தோல், தேன் இரண்டையும் சேர்த்து குலைத்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பின் முகத்தை கழுவ வேண்டும். தினம் இப்படி ஒருமுறை செய்தால் முகப்பரு வரவே செய்யாது. சருமம் உரண்டு போகாமல் ஈரத்தன்மையுடன் இருக்கும்.

கற்றாழை இலையின் ஜெல்லுடன் வாழைப்பழத் தோலையும் சேர்த்து குழைத்து முகத்தில் தடவலாம். இதை அரைமணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இதுவும் முகப்பரு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வாழைப்பழத் தோலுடன், ரோஸ் வாட்டரை சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊறவைத்து கழுவினால் சருமம் புத்துயிர் பெறும்.

வாழைப்பழத் தூள், மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து ரெகுலராகவே முகத்தில் பூசலாம். இது முகப்பருவினால் வரும் வீக்கத்தை குறைக்கும். இதுபோன்ற கலவைகளை தொடர்ந்து முயற்சித்தால், முகப்பருவினால் ஏற்பட்ட தடங்களையும் கூட போக்கிவிட முடியும்.

நாம் தூக்கி வீசும் வாழைப்பழத் தோலுக்கு எவ்வளவு சக்தி பார்த்தீர்களா? அதுதான் இயற்கையின் அருமை!

Leave a Reply

Your email address will not be published.