குருப்பெயர்ச்சி பலன்கள்: இன்று மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி..!! என்னென்ன பலன்களை கொடுப்பார்?

ஆன்மிகம்

ராசிகளில் தனுசு மீனம் தான் குருவிற்கு ஆட்சி வீடுஎன்று சொல்லலாம். கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார்.பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல. 5மாதங்கள் குரு பகவான் கும்ப ராசியிலும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீன ராசிக்கு செல்கிறார் குருபகவான்.இந்த குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்களைப் பற்றி பார்க்கலாம்.

ரிஷபம்

பத்தில் குரு பதவியை பறிப்பார் என்று சொல்வார்கள். உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போகிறார். நிதானமும் பொறுமையும் தேவைப்படும் காலம். அவசர முடிவு எடுக்க வேண்டாம். குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. போராட்டங்கள் முடிவுக்கு வரும் பண வரவு அதிகரிக்கும். நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.

வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும். சிவ ஆலயம் சென்று வணங்க பாதிப்புகள் நீங்கும். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெற உள்ள குரு பெயர்ச்சியாகத்தில் பங்கேற்க பாதிப்புகள் நீங்கும்.

கடகம்

குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். வீடு, சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வீட்டில் இருந்த பிரச்சினை நீங்கி மன அமைதி ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்ய வேண்டாம்.

வண்டி வாகனம் வாங்க நினைப்பவர்கள் இந்த கால கட்டத்தில் வாங்கலாம். புத்திர தோஷம் நீங்கி குழந்தை செல்வம் கிடைக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதல் திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும்.

கன்னி

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிம்மதியும் வரப்போகிறது.செல்வமும் செல்வாக்கு அதிகரித்தாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகனம் புதிததாக வாங்கலாம். திருமணம் நடைபெற்றவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விசயத்திலும் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மூன்றாவது நபர்களிடம் கவனமாகப் பேசலாம். மன உளைச்சல் நீங்கி நிம்மதி அதிகரிக்கு நவகிரக குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கலாம்.

விருச்சிகம்

குருவின் பார்வையால் உடல் நலத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். ஆயுள் கண்டம் நீங்கும். மன உளைச்சல்கள் முடிவுக்கு வரும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும் போது விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தென்திட்டை குரு பகவானை தரிசனம் செய்து வணங்கலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்யலாம்.குரு பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று பரிகாரம் செய்யலாம்.

தனுசு

பழகும் நபர்களிடம் கவனம் தேவை. பயணற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிக எதிர்பார்ப்பு வேண்டாம் ஏமாற்றங்கள் ஏற்படும்.

உடன் பிறந்தவர்களிடம் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களின் தன்னம்பிக்கை தைரியம் கூடும். வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நனவாகும். மன அமைதி அதிகரிக்கும் சுப காரியத்தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

உங்கள் ராசிநாதன் குருவினால் நன்மைகள் ஏற்பட வியாழக்கிழமைகளில் நவகிரக குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். வேலையில் இருந்தாலும் சில நேரங்களில் மன உளைச்சல் ஏற்படும். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம்.

குடும்ப விசயங்களில் மூன்றாவது நபரை தலையிட விட வேண்டாம். வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை. கண்களிலும் வயிற்றிலும் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. நகை, பணத்தை பத்திரப்படுத்தவும். சுப செலவாக மாற்றிக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

மீனம்

வெற்றியைத் தரக்கூடிய 11ம் இடத்தில் அமர்ந்திருந்த குரு தற்போது அங்கிருந்து விரைய ஸ்தானத்திற்கு வந்து அமர்வது சற்று சிரமத்தினைத் தரக் கூடும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. ஓய்வற்ற நிலையின் காரணமாக உடலில் சுகவீனம் தோன்றும். வாந்தி, தலைசுற்றல், பித்த மயக்கம், ஏற்படும்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின்குருவின் விரய ஸ்தான சஞ்சாரத்தினால் ஆன்மிகம் சார்ந்த பணிகளுக்காக அதிகம் செலவழிப்பீர்கள்.ஆன்மிக ரீதியாக தொலைதுாரப் பிரயாணங்கள் செல்ல நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published.