நிஜமா உங்களுக்கு இந்த அறிகுறி தோன்றினால், இப்போது உங்கள் சிறுநீரகம் மீது மிகவும் கவனமாக இருங்கள்..!!

ஆரோக்கியம்

நிஜமா உங்களுக்கு இந்த அறிகுறி தோன்றினால், இப்போது உங்கள் சிறுநீரகம் மீது மிகவும் கவனமாக இருங்கள்..!!சிறுநீரக நோய் அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடியது. நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் இந்நோயை கடுமையான மற்றும் சிக்கலான நிலையில் தான் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்கிறார்கள். மனித உடலில் சிறுநீரகங்கள் பல முக்கியமான செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானவை. இவை இரத்தத்தில் இருந்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவுவதோடு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கவும், வைட்டமின் டி சத்தை ஒருங்கிணைக்கவும் மற்ற உறுப்புக்களுடன் இணைந்து செயல்படவும் உதவுகின்றன.

சிறுநீரகங்கள் மூன்று முக்கிய ஹார்மோன்களை சுரக்கின்றன. அவை எரித்ரோபொய்டின், ரெனின் மற்றும் கால்சிட்ரியால் ஆகும். இவை மூன்றும் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. சிறுநீரக நோய் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மோசமடையச் செய்வது மட்டுமல்லாமல், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட வைக்கின்றன.

ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் சிறுநீரக நோயைத் தடுக்க முடியும். அதோடு முன்கூட்டியே ஒருவர் சிறுநீரக நோயை கண்டறிந்துவிட்டால், எளிதில் அவற்றை குணமாக்கவும் முடியும். ஆகவே ஒருவர் சிறுநீரக நோயின் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இப்போது சிறுநீரக நோயைச் சுட்டிக்காட்டக்கூடிய சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரை அணுகவும்.நன்றி

Leave a Reply

Your email address will not be published.