காய்கறிகள், பழங்களை காட்டிலும் பல மடங்கு நன்மைகளை தருவது இந்த கீரை மற்றும் மூலிகை வகைகள் தான். நமது முன்னோர்கள் அதிகளவில் கீரை மற்றும் மூலிகையை உணவில் சேர்த்துக் கொண்டதனால் தான் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் நாம் இந்த நவீன காலத்தில் பாஸ்ட் புட் மயக்கத்திலயே நம் வாழ்நாளை கொன்று கொண்டு இருக்கிறோம். ஏன் நம் பிள்ளைகளுக்கு கூட எந்தவொரு கீரையின் பெயரோ மூலிகையின் பெயரோ கூட தெரியாமல் வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களாகிய நமக்கு கூட சில கீரை மற்றும் மூலிகை வகைகளின் நன்மைகள் கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். அப்படிப்பட்ட சில அற்புதமான நன்மைகளை அள்ளித் தரும் மூலிகை வகைகளைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
அம்மான் பச்சரிசி
இது பூண்டு வகை குடும்பத்தை சார்ந்தது. இதில் இரண்டு வகைகள் உள்ளன. பெரிய அம்மான் பச்சரிசி தாவரம் மற்றும் சிறிய பச்சரிசி தாவரம். இவை பார்பதற்கு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.உங்க இதயத்தை ஆரோக்கியமாவும் சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்கவும் ‘இந்த’ ஒரு பொருள் போதுமாம்!உங்க இதயத்தை ஆரோக்கியமாவும் சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்கவும் ‘இந்த’ ஒரு பொருள் போதுமாம்!
காணப்படும் இடங்கள்
நடைபாதை, சாலையோரங்களில், நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களான கிணறுகள், ஈரப்பதமான நிலம் போன்றவற்றில் காணப்படுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனையால் மலம் கழிக்கும்போது இப்படி இருக்கா? உடனே நீங்க மருத்துவரை சந்திக்கணுமாம்! மலச்சிக்கல் பிரச்சனையால் மலம் கழிக்கும்போது இப்படி இருக்கா? உடனே நீங்க மருத்துவரை சந்திக்கணுமாம்!
அடங்கியுள்ள பொருட்கள்
இதிலிருந்து வரும் பால் மருத்துவ துறையில் பெரிதும் பயன்படுகிறது. இதில் அஸ்ட்ரிஜெண்ட் , மெழுகு, டோனிக், உயர் கால்சியம் மற்றும் குளிர்ச்சியான தன்மை போன்றவை உள்ளன.