ஒருவருடைய முகம் அழகாக இருக்க வேண்டுமென்றால், அவர்கள் தங்களுடைய பற்கள் வெளியில் தெரியும்படி சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். பற்களை வெளியில் காண்பித்து, வாயை மூடிக் கொள்ளாமல் சிரிக்க வேண்டும் என்றால், நம்முடைய பற்களின் நிறம் வெண்மையாக இருக்க வேண்டும்
அப்போது தான் சிரிப்பதற்கு தைரியமே வரும், என்று கூட சொல்லலாம். உங்களுடைய பல் மஞ்சள் நிறமாக உள்ளதா? டீ கறை படிந்துள்ளதா? வெற்றிலை பாக்கு கரை படிந்துள்ளதா? அல்லது மற்ற சில பழக்கவழக்கங்களினால் கறை படிந்து இருந்தாலும் அந்தக் குறையை போக்குவதற்கு சுலபமான ஒரு முறையைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஒருவரின் முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்கள் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாகவும், மிகவும் கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட நீங்கள் தயங்குவீர்கள்.
பற்கள் மஞ்சள் கறை காணப்படுவதற்கு காரணம் என்னவென்றால், வயது, பரம்பரை காரணங்கள், முறையற்ற பல் பராமரிப்பு, தினமும் அதிகளவு டீ, காபி குடிப்பது, சிகிரெட் பிடிப்பது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவைகளே.
பற்களில் மஞ்சள் கறை படிவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது. எனவே சரியான பற்கள் பராமரிப்பு இருந்தாலே போதும். என்றும் பல் வெள்ளையாக இருக்கும்.பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள் என்னென்ன உள்ளது என்று இப்போது நாம் படித்தறிவோம்.