அருமையான பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா? என்னவென்று பார்ப்போமா??பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வார்கள்.இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இரும்புச் சத்து, பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, டயட்டரி பைபர், புரதச் சத்து, பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளன.
இதனை பாலுடன் ஊறவைத்து குடித்தால் உடலுக்கு நல்ல அற்புத பலன்களை வழங்குகின்றது என்று கூறப்படுகின்றது.ஏனெனில் பேரிட்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பாலில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. இது நமது உடலுக்கு தேவையான ஆற்றலையும், பலத்தையும் வழங்கும் .எனவே தினமும் காலையில் உணவுக்கு முன் வெறும் வயிற்றில் இந்த பேரிட்சை மற்றும் பால் கலந்த இந்த பானத்தைக் குடிக்கவும். குறிப்பாக, பேரிச்சம் பழத்தை ஊற வைப்பதற்கு முன் அது சுத்தமான உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பின்பு பாலில் ஊற வைக்க வேண்டும்.
அந்தவகையில் பாலில் ஊற வைத்து பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
பேரிட்சையை பாலில் ஊற வைத்து விட்டு, பின்னர் அதனை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வேக வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மேலும், இரத்த சோகை தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பேரிச்சை உதவுகிறது.பசும் பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், அது அவர்களுக்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் ஏராளமான சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கின்றன. அதேபோல் பேரிச்சம் பழம் மற்றும் பால் கலவையை தவறாமல் உட்கொள்வது கருவில் உள்ள குழந்தைக்கு உறுதியான எலும்புகள் மற்றும் அதிக அளவிலான ரத்தத்தை உருவாக்க வலி வகை செய்யும்.
பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் சருமத்திற்கு சிறந்தது. முக சுருக்கத்தை நீக்க விரும்புவோர் உலர்ந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், இது நேரெதிராக வேலை செய்யும்.
பாலில் ஊற வைத்த பேரிச்சையுடன் தேன் கலந்து, அதனை அரைத்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். அந்த பேஸ்டை முகத்தில் பேக் போல இட்டுக் கொண்டு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடவும். வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ் பேக் செய்து போட்டுக் கொண்டால் முக சுருக்கம் நீங்கி இளமையாக நீங்கள் காட்சியளிப்பீர்கள்.பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது ஒருவரின் ஆற்றலை அதிகரிக்க உதவும். பாலில் ஊற வைத்த பேரிச்சை ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் அடர்த்தியான உணவாக செயல்பட்டு உங்களின் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.
பாலில் ஊற வைத்த பேரிச்சம் பழம் எடுத்துக் கொள்வது பெண்களுக்கு கருவுறுதலை மேம்படுத்த உதவும். இந்த கலவையில் பைட்டோ கெமிக்கல்ஸ் கலவைகள் இருப்பதால், இது கருவுருதலுக்கு உதவும்.. இது பெண்களுக்கு முதிர்ந்த பெண் முட்டைகளை உருவாக்க உதவுகிறது. கரு முட்டையின் தரம் மற்றும் கர்ப்பப் பையில் கரு சரியாக தரிப்பதற்கும் பேரிச்சம் பழம் உதவி புரிகிறது.