பிரபல சீரியல் நடிகை ஸ்ரீ வித்யாவை ஞாபகம் இருக்கா.. இவரது நிலை என்ன? தற்பொழுது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

திரையரங்கம்

சன் டிவியில் 1500 எபிசோட்டுகளை கடந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல்களில் ஒன்று கோலங்கள். இதில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீவித்யா ரசிகர்கள் அவரை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

மேலும் அவர் கோபமான காட்சிகளில் கண்களை உருட்டி உருட்டி நடித்த ஸ்ரீவித்யா, சீரியல்களில் பிஸியாக இருந்த போது தன்னுடைய உறவினரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தொடர்ந்து குடும்பம், பிள்ளைகள் என பொழுதை கழித்தாலும் மீண்டும் சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இவர் சொந்தமாக தொழில் செய்ய எண்ணி சீரியலுக்கு முழுக்கு போட்டார். அதாவது வெளிநாடுகளில் ஃபேமஸாக இருக்கும் ‘கிளவுட் கிச்சன்’ எனும் கான்செப்டில் சொந்தமாக தொழில் தொடங்கி, அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.

இவர் சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தருகிறது இவரது நிறுவனம். ஹோட்டல் போல இல்லாமல் உணவு தேவைப்படுவோர் அழைப்பின் பேரில் வீட்டிலேயே செய்து தரும் முறை தற்போது பிஸியாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தாலும் நடிப்பிலும் அசத்த ரெடியாக இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published.