சந்து பல்லா?? அட கிளிப் வேண்டாம், முன் பற்களில் உள்ள இடைவெளியை சரி செய்ய ஒரு மணி நேரத்தில் தீர்வு..!! முகத்திற்கு அழகை தருவது சிரித்த முகம். அந்த சிரிப்பிற்கு அழகை தருவது வெண்மையான ஆரோக்கியமான பற்கள் தான். பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி பற்களின் முக்கியத்துவம் பற்றி கூறுகின்றது. உடலின் ஆரோக்கியத்தை பற்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என மருத்துவம் கூறுகின்றது. எனவே நீங்கள் பற்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும்.
இரண்டு பற்களுக்கு இடையே உள்ள இடைவெளியை அடைக்க செயற்கை முறையிலான பல்லை வைக்க கூடிய சிகிச்சையை கொள்ளலாம். ஆனால் இது சிறிய பற்கள் உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும்.அனைத்து பற்களுக்கு இடையேயும் இடைவெளி இருந்தால் அவற்றை அடைப்பது தவறு. ஏனெனில் அது பற்களின் ஈறுகளை பாதித்து, பற்களின் அளவை பெரிதாக்கிவிடும்.
.
பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது செய்ய வேண்டியவை ?
பிரஷின் தலைப் பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே அது நல்ல பிரஷ். அத்தகைய பிரஷினை கொண்டு பல் துலக்கினால் பல் வரிசையின் அனைத்து பகுதிகளும் சுத்தமாகும்.தினமும் பற்களை காலை, இரவு என்று இரண்டு முறைகள் பல் துலக்க வேண்டும். மேலும் சாப்பிட்ட பின்பும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
தினமும் காலையில் பல் துலக்கும் முன் சுத்தமான நல்லெண்ணெய்யில் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.பற்களை வெண்மையாக்க உப்பு மிகவும் சிறந்த பலனை தருகிறது. அதனால் தினமும் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.கரும்பு, அன்னாச்சிப்பழம் போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் பற்களுக்கு இடையே உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் நீங்கும்.
சரி வாருங்கள் கிளிப் போடாமல் முன் பற்களில் உள்ள இடைவெளியை சரி செய்ய ஒரு மணி நேரத்தில் தீர்வு..