சுவாசத்தைப் பொருத்தவரைக்கும் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு பார்த்தீர்களென்றால் 12 லிருந்து 20 வரை சுவாசம் வேண்டும். இந்த அளவு கீழே குறைந்தாலோ, இருபதுக்கு மேல் அதிகமாகும் பொழுது அப்நார்மலாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் நாம் மூச்சுத்திணறல் என்று கூறுகிறோம். இந்த மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நம் வாழ்க்கைக்கு சுவாசம் ரொம்ப முக்கியம்.
இயற்கையாய் நிகழும் சுவாசம் நாம் அறியாமலேயே நிகழ்கின்றது. இந்த மூச்சு நிகழ்வில் சி ரமம் ஏற்படும் பொழுது, தேவையான காற்று கிடைக்கவில்லை என்பது போல் உணர்வு ஏற்படும் பொழுது ஒரு தொந்தரவினை உணர்கிறோம்.சிலருக்கு எளிய பயிற்சியே மூச்சு வாங்கும். மாடி மெதுவாய் ஏறினால் கூட சிலருக்கு மூச்சு வாங்கும். ஆஸ்துமா, இ ழுப்பு பி ரச்சி னை உடையவர்களுக்கு அதிக சத்தத்தோடு சுவாசம் நிகழும்.
இருதயத்தினால் போதுமான ரத்தத்தினை பம்ப் செய்ய இயலாத பொழுது மூச்சு திணறுவது போல் இருக்கும். மூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். தொடர் பாதிப்பில் நோயின் தாக்கம் கூடிக் கொண்டே போகும்.
காரணங்கள் :
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, உயரமான இடங்களுக்கு பயணிப்பது, உடற்பருமன், ஆஸ்துமா ஆகியவை மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளது.இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை தொடர்ந்து இருமல், இளைப்பு, நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு மேலோங்கும்.சரி வாருங்கள் சுவாசப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ருசியான நுரையீரல் குழம்பு எப்படி தயாரிக்கலாம் என்று கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்