முன்பெல்லாம் நாப்பது வயதுக்கு மேலானவர்களுக்குத் தான் பெரிய நோய்கள் எல்லாம் எட்டிப் பார்த்தன. ஆனால் இன்றோ இளவயதினரே கடும் நோய்களுக்கு ஆளாகின்றனர். சாதாரணமாக நாம் மருத்துவமனைக்குச் சென்றாலே இரத்தம், சிறுநீர்ப் பரிசோதனைதான் மேற்கொள்ளச் சொல்கிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் அதற்கும் முன்னரே சிறுநீரில் நல்லெண்ணெய் ஊற்றி தங்கள் ஆரோக்கியத்தை தாங்களே சோதித்துப் பார்த்துள்ளனர்.
எந்தவித செலவும் இன்றி இதை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். நம் உடலில் உண்டாகும் எல்லாப் பி ரச் னைகளுக்கும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் தான் அடிப்படை. இதில் எது அதிகம் என அறிந்து அதைத் தவிர்த்தாலே நோயின்றி வாழலாம். அதைத்தான் நம் முன்னோர்களான சித்தர்கள் சிறுநீரிலேயே கண்டுபிடித்து சுய வைத்தியம் செய்தனர்.
இதை நாம் எப்படிச் செய்வது என இனி பார்க்கலாம். காலையில் நாம் தூங்கி விழித்ததும் முதன் முதலில் போகும் சிறுநீரை ஒரு கண்ணாடி டம்ளரில் பிடித்து வைக்க வேண்டும். இந்த சி.றுநீரில் நாலு சொட்டு நல்லெண்ணெயை விட்டு,விட்டு அரைமணிநேரம் கழித்து எடுத்துப் பார்க்க வேண்டும். இனி தான் விசயமே இருக்கிறது.
சிறுநீரின் மேல் நல்லெண்ணெய் கயிறுபோல் நெளிந்து காணப்பட்டால் நம் உடலில் வா.தம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இந்த எண்ணெய் சிறுநீரில் வட்ட வடிவில் மோதிரம் போல் இருந்தால் பித்தம் உடலில் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இதே அந்த எண்ணெய் இவை இருமாதிரியும் இல்லாமல் முத்து போல் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தால் க.பம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
இவை மூன்று போலவும் இல்லாமல் எண்ணெய் சி.று.நீருக்குள் வேகமாக ப.ரவிப் போனால் நம் உடல் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியுடன் எந்த நோ யையும் விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டு உள்ளது என்று அர்த்தம்.