இந்த காலத்தில் பெண்கள் குழந்தைப்பேறு கிடைக்க வாழைப்பூ ஓர் வரப்பிரசாதமாக திகழ்கிறது.பூக்களில் மனமுள்ளவை, மனமில்லாதவை என்று பொதுவாக இரு வகைப்பட்டாலும், அவற்றில் பல ஆயிரக்கணக்கான வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நறுமணத்தை தரக்கூடிய பூக்களை, பெண்கள் தலையில் சூடிக்கொள்ளும்போது அழகை மெருகூட்டி காட்ட கூடிய பொருளாக உள்ளது. அதுமட்டுமன்றி, முக்கியமாக கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்த பூக்கள் முதன்மையான இடத்தில் உள்ளது. பூக்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில் திருப்பதி, சபரிமலை, பழனி போன்றவை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெருமை மிக்க பூக்களில் நம் உடலை பாதுகாக்க கூடியதாகவும், ஆயுளை அதிகரிக்க வைக்கும் பூக்களில் மிக முக்கியமானதாக வாழைப்பூ உள்ளது. வாழைப்பூவில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற உயிர்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதையடுத்து, வாழைப்பூ சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைப் பூவை சுத்தம் செய்து சிறிது, சிறிதாக நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையத்தை வலுப்பெற செய்து உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க செய்து, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
வாழைப்பூவை தினமும் சாப்பிட்டு வர இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும்.இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கிறது.உடலில் இயல்பாகவே இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கும் தன்மை கொண்டுள்ளதால் வாழைப்பூவை சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் வராது.
வாரம் ஒரு முறை வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ள, மல, ஜலம் கழிக்கும் போது வெளியேறும் இரத்தம் விரைவில் கட்டுப்படும்.சிலருக்கு பிறந்ததில் இருந்து உடல் சூடு இருக்கும். சிலருக்கு கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூடு ஆகியவற்றை குறைக்க வாழைப்பூவுடன் பாசிப்பருப்பை சேர்த்து கடைந்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.
சீதபேதி மற்றும் வாய் நாற்றம் உள்ளவர்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர படிப்படியாக குறைய தொடங்கும்.பெண்களின் கர்ப்பப்பையை பாதுகாத்து, கர்ப்பப்பை கோளாறுகளை நீக்க உதவுகிறது.
பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படும் மாதவிலக்கு காலங்களில், வாழைப்பூவில் உள்ள வெள்ளை பாகத்தை நசுக்கி சாறு பிழித்து அதனுடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து குடித்து வர இரத்த போக்கு கட்டுப்படும்.
வாழைப்பூவில் உப்பு போட்டு வேக வைத்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ளவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து சாப்பிட்டு வர வெள்ளைபடுதல் குறைவதோடு, வரட்டு இருமலும் குறையும்.கை, கால் வலி உள்ளவர்கள் வாழைப் பூவை இடித்து சாறு பிழிந்து அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வலி உள்ள இடத்தில் தேய்த்து சுடு நீரில் ஒத்தடம் கொடுத்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
மலட்டுத்தன்மை உள்ளவர்கள் அடிக்கடி வாழைப்பூவை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் குழந்தைப்பேறு கிடைக்கும்.குலம் தழைக்க, குலை தள்ளும் வாழைப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாக இருக்கலாம்.வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்.