உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் சோளம் பயிரிடப்படுகிறது.இது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம் ஆகும்.இவற்றில் சில தானியங்களுக்காகவும், வேறுசில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன.சோளத்தை முழுதாகவோ, உடைத்தோ வேகவைத்து அரிசிபோன்றும், அரைத்து மாவாகவும் உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
சோளத்திலுள்ள சத்துக்கள்:
இதில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம்., வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன.
சோள உணவுகள் உடலுக்கு உறுதி அளிக்கவல்லவை. உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும்.
பக்கவிளைவுகள்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
*உடல் பலவீனமானவர்கள் சோளத்தை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் சோளத்தை ஜீரணிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும்.
*பித்தம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் சோளத்தைத் தவிர்க்க வேண்டும்.
*சோளத்தின் நுகர்வு காரணமாக, ஏதேனும் முறைகேடு அல்லது உடல்நலம் தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தினால் சோளத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்.
*தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பின்னர் சோளத்தை உட்கொள்ளலாம்.