இந்திய உணவுகளில் குறிப்பாக தென்னிந்திய உணவுகளில் முக்கிய இடத்தை வகிக்கும் இரண்டு பொருட்கள் வெங்காயமும், பூண்டும். இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை. அதிலும் வெங்காயம் இல்லாத சமையல் என்பது சுவையில்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது.
நம் முன்னோர்கள் இந்த இரண்டு பொருட்களையும் உணவில் சேர்க்க காரணம் இவற்றின் சுவை மட்டுமே அவற்றின் ஆரோக்கிய குணங்களும்தான். இவற்றின் ஆரோக்கியத்தை பற்றி நாம் ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும் நாம் பலரும் அறியாத ஒரு விஷயம் இவற்றின் தோல்களிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. அவற்றை பற்றித்தான் இங்கு பார்க்க போகிறோம்.