வீடியோ: வெறும் 7 நாளில் சர்க்கரை நோயை முற்றிலும் விரட்டும் இந்த ஒரு அதிசய பூ..!!

ஆரோக்கியம்

நித்திய கல்யாணி ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை.இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். நித்தியக் கல்யாணி நாடியைச் சமப்படுத்தவும், சிறுநீர் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது.

இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.

நீரிழிவுநோய்

நித்யகல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.

நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதிமூத்திரம் போன்றவை குணமாகும்.நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.

நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது.புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், கருஞ்சீரகம். நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும்.

இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.Full credits to video owner

Leave a Reply

Your email address will not be published.