ஒரு துண்டு பப்பாளியை நீங்கள் தினமும் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா….!!

ஆரோக்கியம்

பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது. பப்பாளி பறங்கிப்பழம் என்று அழைக்கப்படுகிறது.இதன் பூர்வீகம் மெக்சிகோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பப்பாளி விளைகிறது.

பப்பாளியில் அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது.பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசக்கும்.பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.

பப்பாளி பழம் சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்த நன்மைகளை தரக்கூடியது. பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.அந்தவகையில் தினமும் பப்பாளி சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.கொழுப்பைக் குறைக்கிறது. இதில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பை தடுக்கிறது.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளி பழம் சிறப்பாக செயல்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, நம் உடல் சோர்வையும் குறைக்கிறது.

பப்பாளி சாப்பிடுவது உங்க செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மாதவிடாய் நேரத்தின்போது உடலில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு பப்பாளி சிறந்த தீர்வை அளிக்கிறது. எனவே பெண்கள் பப்பாளி சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.

பப்பாளி பழத்தில் விட்டமின் A, ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை கண்களில் உள்ள சளி சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அவை சேதமடையாமல் தடுக்கின்றன. விட்டமின் A மாகுலர் சிதைவின் வளர்ச்சியை தடுக்கிறது.

கீல்வாதத்தில் இருந்து பாதுகாக்கிறது. பப்பாளி நம் எலும்புகளுக்கு நல்லது. ஏனெனில் அவற்றில் விட்டமின் C உடன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.