பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் தங்கள் கடந்து வந்த சோக பாதையினை கதையாக கூறி பார்வையாளர்களை அழ வைத்திருக்கும் இந்த வேளையில் இமான் அண்ணாச்சி பேசிய போது சண்டை எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆண் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சத்தமாக வார்த்தைகளை அள்ளிவிடுகின்றனர். இதனைக் கண்ட பெண் போட்டியாளர் சண்டை ஆரம்பமாகப் போகுது என்று அலறுகிறார்.