தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ராம் பொத்னேனி.இவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.இவர் இதற்கு முன் உப்பெண்ணா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படத்திற்காக ஜிம்மில் கடும் ஒர்கவுட் செய்து வந்துள்ளார் நடிகர் ராம் பொத்னேனி.அப்போது அவருக்கு கழுத்து காயம் ஏற்பட்டதால், தற்போது படப்பிடிப்பை இயக்குனர் லிங்குசாமி நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதோ நீங்களே பாருங்க..