மனிதர்களுக்கு ஏற்படும் வ லிகளில் மிகவும் முக்கியமான வ லி என்றால் அது பல் வ லிதான். ஏனெனில் பல் வ லி ஏற்படும் போது அவர்களால் உணவை சரியாக உண்ண முடியாது. உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கும் உணவு இல்லாதபோது தானாக நமது உடல் விரைவில் சோர்வடைய தொடங்கும்.
பல் வ லி குணமாகும் வரை நம்மால் எந்த வேலையையும் கவனமாக செய்ய முடியாது. பல் வ லி என்பது பற்களை மட்டுமல்லால் நமது ஒட்டுமொத்த உடலையும் பா திக்கும் ஒரு வி ஷயமாகும்.சொ த்தை பல், ஈ றுகளில் பி ரச் சினை, உ டைந்த ப ற்கள் என பல் வ லி ஏற்பட பல காரணங்கள் உள்ளது. க டுமை யான பல் வ லி ஏற்படும்போது நாம் முதலில் தேடுவது மருத்துவரைத் தான்.
ஆனால் அனைத்து பிர ச்சி னைகளுக்கும் தீர்வு கூறி விட்டு சென்றிருக்கும் நம் முன்னோர்கள் பல் வ லியை விட்டு வைத்திருப்பார்களா?. நமது முன்னோர்கள் பயனபடுத்திய மிகுந்த நம்பிக்கைக்குரிய பல் வ லிக்கான எளிய வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அ க்குப ஞ்சர் மூலம் உங்கள் பல் வ லியை விரைவில் குறைக்கலாம். உங்கள் இடக்கையின் கட்டைவிரலை கொண்டு உங்கள் வலதுகையின் சுட்டு விரல் மற்றும் கட்டை விரல் இணையும் இடத்தில் நன்கு அழுத்தம் கொடுக்கவும். இதனை இரண்டு நிமிடம் தொடர்ந்து செய்யவும். இது நல்ல ஹார் மோ ன்களான எண்டோர்பினை சு ரக்கச்செய்து உங்கள் வ லியை உடனடியாக கு றைக்கும்.