மூக்குத்திப் பூச்செடியை தெரியாதவர்கள் யாருமே கிராமங்களில் இருக்க முடியாது. ஏனென்றால் இது எல்லா கிராமங்களிலும் இருக்கும். இதற்கு தாத்தப் பூ செடி, தலைப்வெட்டிப் பூ செடி, என பல பெயர்கள் கூட உண்டு. இந்தச் செடி உங்கள் ஊரில் இருக்கா? உடனே வேரோடு பிடுங்கி வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போங்க… என்ன காரணம் தெரியுமா? இந்த செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது.புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.விஷத் தன்மையை முறிக்கும் சக்தி வாய்ந்தது.பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும்.மூட்டு வலியைச் சரி செய்யும்.சளி, இருமலுக்கு அருமருந்தாக அமையும்.
இந்தச் செடியானது புதரைப் போல் சாலை ஓரங்களில் அடர்ந்து வளர்ந்து கிடக்கும். இந்தச் செடியில் வளைந்த மற்றும் கூரிய முட்கள் இருக்கும். இந்த செடியை கவனமுடன் கையாள வேண்டும்.இதன் பூக்கள் மஞ்சள், வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் இருக்கும். காய்கள் மிளகை போன்று காணப்படும்.காய்கள் விஷத்தன்மை வாய்ந்தது . இதனால் இதன் காய்களை எக்காரணம் கொண்டும் சாப்பிடக் கூடாது.இந்தக் குட்டிச் செடி ஏராளமான நோய்களை தீர்க்கக் கூடியது.இந்த இலைகளை எடுத்து நன்றாகக் கழுவி மிளகு ரசத்தில் போட்டு குடித்தால் சளி, இருமல், தலை பாரம் , தலை வலி ஆகியவை குறைந்து விடும்.
திடீரென உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு, இரத்தம் நிற்காமல் சென்றால், அந்த இடத்தில் மூக்குத்திப் பூ இலைச் சாறை விட்டால் உடனடியாக இரத்தம் நின்று , உறைந்து விடும்.முழங்கால் வலி மற்றும் மூட்டு வலி ஆகியவற்றிற்கு சிறிது நல்லெண்ணையை சூடு செய்து, அதில் இதன் இலை, பூ, வேர் போன்றவற்றை போட்டு சிறிது வதக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் வைத்து கட்டி விடுங்கள். வலி உடனடியாக தீர்ந்து விடும்.
பெரிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை பிடிங்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து உடம்பில் உள்ள வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படிப்பட்ட புண்களாக இருந்தாலும் விரைவில் ஆறி விடும்.இந்த அரிய வகை மூக்குத்தி பூ செடி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது. இதனுடைய பூ மூக்குத்தியை போன்று இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளின் உடலில் இருக்கும் புண்களைக் கூட இது எளிதாக குணப்படுத்தும் தன்மை கொண்டது.அதே போல் தேமல், சொரி போன்றவற்றிக்கு இதன் இலைகளைக் கழுவி பின் இரண்டு கைகளாலும் கசக்கி சாற்றை இலைகளுடன் சேர்த்து சொரி, தேமல் இவற்றின் மீது தேய்க்க வேண்டும்.அப்படி இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை செய்யும் போதே தேமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.