தமிழ் தொலைக்காட்சியில் தற்போது போட்டிகள் அதிகரித்து புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதற்கு காரணம் பிரபல தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் தான். டிஆர்பியில் அதிரவைக்கும் ரேட்டிங்கை பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சீசன் 5ஐ உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளது.
18 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட வீட்டில் சென்ற போட்டியாளர்கள் தங்களுக்குள் அறிமுகமாகி நன்றாக பேச ஆரம்பித்துள்ளனர். நிகழ்ச்சி ஆரம்பித்த சிலநேரங்கள் ஒரு காட்சியை பார்த்து நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.
போட்டியாளர் திருநங்கை நமீதாவிடம் யூட்யூப் பிரபலமான அபிஷேக் உங்க செருப்பை கழட்டுங்க உங்களோட ஒரிஜினல் ஹைட் என்னன்னு பாக்கணும் என்று சக போட்டியாளர் ராஜு-வை விட நீங்க ஹைட்டா-ன்னு பாக்கணும் என கூறினார்.
இதனை தொடர்ந்து, செருப்பை கழட்டி விட்டு நின்ற நமீதாவையும், ராஜு-வையும் அருகருகே நிற்க வைத்து யார் ஹைட்டாக இருக்கிறார் என்று உலக நாடுகள் பலவும் பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆராய்ச்சியை வெற்றிகரமாக செய்து முடித்தார் அபிஷேக் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.